சிந்தனை திறன் கேள்விகளுக்கு மாறுகிறது சி.பி.எஸ்.இ.,
சென்னை: மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், சிந்தனைத்திறன் கேள்வித்தாள்களை வடிவமைக்க, சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது.மாணவர்களை மனப்பாடம் செய்வதிலிருந்து விடுவித்து, அவர்களின் திறன் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது.அதன்படி, பாடத்தில் ஆழமான புரிதல், சுயசிந்தனையுடன் சிக்கல்களை தீர்த்தல், நிஜ பயன்பாட்டை புரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில், கேள்வித்தாள்களை வடிவமைக்க சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.இதன் முதல் படியாக, கொள்குறி வகையிலான வினாக்களை அதிகளவில் அமைக்கவும், வழக்கமான கேள்விகளுக்கு பதிலாக, சிந்தனை திறன் கேள்விகளை 50 சதவீதம் வரை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.இதன் அடிப்படையில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, தற்போது மாதிரி வினாக்கள் தயாரிக்கப்பட்டு, மாணவர்கள் சிந்தித்து விடையளிக்க பயிற்சி வழங்கும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.