காலநிலை மாற்றம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.காலநிலை மாற்ற இயக்கம், தர்மபுரி வனக்கோட்டம் மற்றும் வன பாதுகாப்பு படை சரகம் சார்பில், நடந்த நிகழ்ச்சியில், தர்மபுரி வனச்சரக அலுவலர் பெரியண்ணன் தலைமை வகித்தார். வனவர் அசோகன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரூர் உதவி பேராசிரியர் குமரன் காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார். இதில், வன பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.