உள்ளூர் செய்திகள்

சாக்கோட்டையில் மைதானம் இன்றி மாணவர்கள் தவிப்பு

காரைக்குடி: சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இன்றி, மாணவர்களின் விளையாட்டு பாதிக்கப்படுகிறது.தமிழக அரசு சார்பில் மாணவர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்க ஊராட்சி பகுதிகளிலும் நகர்ப்புறங்களிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.ஆனால் இளைஞர்கள் விளையாடுவதற்கு போதிய விளையாட்டு மைதானங்கள் இல்லாத நிலை தான் இன்று வரை உள்ளது. சாக்கோட்டை வட்டாரத்தில் உள்ள பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது.மாணவர்கள், விரும்பும் விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள குளக்கரை, காலி மனையிடங்களில் விளையாடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்