உள்ளூர் செய்திகள்

பாரதி கலைக்கழக மகளிர் தின விழா

சென்னை: நங்கநல்லுாரில் உள்ள பாரதி கலைக்கழகத்தில், அதன் துணைத்தலைவர் விஜயலட்சுமி மாசிலாமணி தலைமையில் மகளிர் தின விழாவும், கவிஞர் சுதா வேதம் தலைமையில் 717வது மாதக் கவியரங்கமும் நேற்று நடந்தன.அதில், 32 கவிஞர்கள் 'செவ்விது செவ்விது பெண்மை' என்ற தலைப்பில், கவிதைகளை வாசித்தனர்.பாரதி கலைக்கழக தலைவர் குமரிச்செழியன் பேசுகையில், “பாரதி கலைக்கழகத்தின் இந்தாண்டிற்கான மகளிர் விருது, கவிஞரும் ஊடகவியலாளருமான மு.செண்பகக்கா சிக்கு வழங்குவது பெருமை.தற்போது, பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னேறி உள்ளனர். அவை, தனிப்பட்ட முன்னேற்றங்களாகவே உள்ளன; அவர்கள் சமூகத்திலும் முன்னேற தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும்,” என்றார்.நிகழ்ச்சியில், பாரதி கலைக்கழக நிறுவனர் பாரதி சுராஜின் மகன் ராமசாமி, கவிஞர்கள் திருவைபாபு, செல்லையா, பட்டுராசபாரதி, சுப.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்