உள்ளூர் செய்திகள்

ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் பயிற்சி முகாம்

மரக்காணம்: கோட்டகுப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பேச்சு மொழி 2கே 26 சார்பில், பொதுப் பேச்சு கலையில் தேர்ச்சி பெறுதல் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.கல்லுாரி செயலர் சிவகுமார் தலைமை தாங்கினார். முதல்வர் பூமாதேவி முன்னிலை வகித்து, தலைமையுரை ஆற்றினார். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் சத்யா வரவேற்றார்.திண்டிவனம், ஓங்கூர் தட்ஷஷீலா பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் ராபர்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.பொது மேடைகளில் அச்சமின்றி பேசுவது எப்படி, உரையாடல் திறன்களை மேம்படுத்துவது மற்றும் மேடை நாகரிகம் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். பயிற்சியில் கலந்து கொண்ட முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.உதவிப் பேராசிரியர் ஐஸ்வர்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்