உள்ளூர் செய்திகள்

ஆல்பா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி: உருளையான்பேட்டை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.ஆல்பா கல்வி நிறுவனங்களின் சேர்மன் பாஷிங்கம் வரவேற்றார். ஆல்பா கல்வி நிறுவனங்களின் துணை சேர்மன் தனலட்சுமி பாஷிங்கம், ஆல்பா கல்வி நிறுவனங்களின் துணை இயக்குனர் ராஜலட்சுமி, நந்தினி நவீன் தியாகு ஆகியோர் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தின் சீனியர் மண்டலத் தலைவர் தினேஷ் வாசுதேவன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். ஆல்பா ஆர்த்தோ கிளினிக்கின் இயக்குனர் நவீன்தியாகு, பள்ளி முன்னாள் மாணவர்கள் டாக்டர்கள் அரவிந்தகுமார், பானுப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியருக்கும், நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மருத்துவ பிரிவில் இடம்பெற்ற மாணவர்களுக்கும், வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்