அரசு கவின் கலைக் கல்லூரிகளில் அட்மிஷன்
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும், அரசு கவின் கலைக் கல்லூரிகளில் 2026-27ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்லூரி வளாகங்கள்: சென்னை, கும்பகோணம் மற்றும் மதுரை தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற இக்கல்லூரிகளில், நான்கு ஆண்டுகள் கொண்ட இளங்கவின் கலை (பி.எப்.ஏ.,) மற்றும் இரண்டு ஆண்டுகள் கொண்ட முதுகவின் கலை (எம்.எப்.ஏ.,) படிப்புகள் வழங்கப்படுகின்றன. வழங்கப்படும் படிப்புகள்: சென்னை கல்லூரியில் வண்ணக்கலை, காட்சித் தொடர்பு வடிவமைப்பு, சிற்பக்கலை, சுடுமண் (ஆலையக) வடிவமைப்பு, துணியியல் (ஆலையக) வடிவமைப்பு மற்றும் பதிப்போவியம் ஆகிய துறைகள் உள்ளன.கும்பகோணம் கல்லூரியில் ஒருங்கிணைந்த வடிவமைப்பு, இயங்குபட வடிவமைப்பு மற்றும் காட்சிவழித் தொடர்பு போன்ற பாடப்பிரிவுகளும், மதுரையில் வண்ணக்கலை, சிற்பக்கலை உள்ளிட்ட அடிப்படை கவின் கலைப் பிரிவுகளும் செயல்படுகின்றன.தகுதிகள்:இளங்கவின் கலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஜூலை 1, 2026 அன்று தேதியின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் 26 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 23 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். முதுகவின் கலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் இளங்கவின் கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஏதுமில்லை.விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ள தகுதியான மாணவர்கள் https://artandculture.tn.gov.in/node/add/gov-college-of-fine-art-four-yrs எனும் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 8, 2026 விபரங்களுக்கு: www.artandculture.tn.gov.in