ஐ.டி.ஐ.,களில் அரசு ஒதுக்கீடு, விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இரண்டு அரசு, 10 தனியார் ஐ.டி.ஐ.,களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவ, மாணவியர் சேர, www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய். அரசு ஐ.டி.ஐ.,களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம், 750 ரூபாய் கல்வி உதவித்தொகை, அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியருக்கு தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும். தவிர சீருடை, இலவச லேப்டாப், சைக்கிள், பாடப்புத்தகம், கருவிகள் போன்றவை இலவசமாக பெறலாம். ஜூன், 3க்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.