உள்ளூர் செய்திகள்

ஆய்வுகளை மேம்படுத்த அதிரடி திட்டம்

நாட்டின் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் வகையில், 'பிரதமரின் ஆராய்ச்சி இருக்கை திட்டம் 2026' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.நோக்கம்:* உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்கள் மற்றும் முன்னணி தொழில்துறைகளில் முத்திரை பதித்துள்ள இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை இந்தியாவின் முதன்மை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைத்தல். * உலகத் தரம் வாய்ந்த வல்லுநர்களின் வழிகாட்டுதலால் நாட்டின் ஒட்டுமொத்த கண்டுபிடிப்பு சூழலை வலுப்படுத்துதல்.துறைகள்: செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர், ஆற்றல் மற்றும் காலநிலை மாற்றம், சைபர் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை, அணுசக்தி, பயோடெக்னாலஜி, ஹெல்த்கேர், புளூ எகானமி, விவசாயம் மற்றும் உணவுத் தொழில்நுட்பங்கள்.பிரிவுகள்: ஆரம்பகட்ட ஆராய்ச்சியாளர்களுக்கான 'இளம் ஆராய்ச்சி வல்லுநர்கள்', அனுபவம் வாய்ந்தவர்களுக்கான 'முதுநிலை ஆராய்ச்சி வல்லுநர்கள்' மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி தலைவர்களுக்கான 'ஆராய்ச்சி இருக்கைகள்'. கல்வி நிறுவனங்கள்: பொறியியல் பிரிவில் முதல் 100 இடங்களுக்குள் இருக்கும் அரசு உயர்கல்வி நிறுவனங்கள். என்.ஐ.ஆர்.எப்., ஆராய்ச்சி பிரிவில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் டி.எஸ்.டி., டி.பி.டி., ஐ.சி.எம்.ஆர்., சி.எஸ்.ஐ.ஆர்., போன்ற தேசிய ஆய்வகங்கள். மேலும், ஐ.ஐ.டி.,-டெல்லி, ஐ.ஐ.டி.,-மும்பை, ஐ.ஐ.டி.,-சென்னை, ஐ.ஐ.டி.,-கான்பூர், ஐ.ஐ.டி.,-ஹைதராபாத், ஐ.ஐ.டி.,-தன்பாத் மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் ஆகிய 7 முன்னணி நிறுவனங்கள்.விபரங்களுக்கு: https://pmrc.education.gov.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்