கல்லுாரி மாணவர்களுக்கு டேட்டா அனலிட்டிக்ஸ் பயிற்சி
புதுச்சேரி: சாரதா கங்காதரன் கல்லுாரியில் டேட்டா அனலிட்டிக்ஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சாரதா கங்காதரன் கல்லூரி யின் வேலைவாய்ப்புப் பிரிவு, ஐ.சி.டி., அகாடமியுடன் இணைந்து, ஐ.பி.எம்., ஸ்கில் பில்ட் பிளாட்பார்ம் திட்டத்தின் கீழ் டேட்டா அனலிட் டிக்ஸ் குறித்த பயிற்சி முகாம் கல்லுாரி கருத்தரங்கம் கூடத்தில் நடந்தது.இ ப்பயிற்சியில் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் பி.சி.ஏ., பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.எஸ்.சி., ஐ.டி., பாடப்பிரிவுகளை சேர்ந்த 44 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, சாரதா கங்காதரன் கல்லுாரியின் துணை தலைவர் பழனிராஜா தலைமை தாங்கி, புதிய தொழில்நுட்பங்களை கற்று தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளுமாறு மாணவர்களை வாழ்த்தி பேசினார். ஐ.சி.டி., அகாடமி மேலாளர் ஜெயிரஸ், கல்லுாரி முதல்வர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.