அரசு கலைக்கல்லுாரியில் தீயணைப்புத் துறை பயிற்சி
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் கனகசபாபதி தலைமை தாங்கினார். தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் ஜமுனா ராணி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் கால மீட்பு பணிகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.மேலும், தீயணைப்பு துறை வேலை வாய்ப்புகள் மற்றும் தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை ஆகியவை குறித்து மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினர் விளக்கம் அளித்தனர்.துறைத் தலைவர்கள் கார்த்திகேயன், ஸ்ரீதேவி, விளையாட்டு இயக்குநர் ஜோதிபிரியா, நிலைய அலுவலர் (பயிற்சி) ஸ்ரீராம் உட்பட பலர் பங்கேற்றனர்.