உள்ளூர் செய்திகள்

கல்வி கடனுதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: பள்ளி மற்றும் கல்லுாரி கல்வி கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் சுரங்கம், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பிற்கான கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.அந்த வகையில், 2026 - 2027ம் நிதியாண்டில், 1,000 முதல் 25,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள், https://scholarships.gov.in என்ற மின்னஞ்சலில் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிக்க விரும்புவோர், வங்கி கணக்கில் தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர், தங்களது ஆதார் எண்ணை, வங்கி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும்.பள்ளிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆக., 31ம் தேதியும், கல்லுாரிக்கான விண்ணப்பங்கள் அக்., 31ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், விபரங்களுக்கு, கிண்டி, திரு.வி.க., தொழில் பூங்காவில் உள்ள மத்திய நல ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது wclwo.chn-mole@gov.in மின்னஞ்சல் வாயிலாகவும், 044 - 2953 0169 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்