உள்ளூர் செய்திகள்

பாரதி விழா போட்டிக்கு மாணவர்களுக்கு அழைப்பு

அன்னுார்: அன்னுாரில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, நாளை இலக்கியப் போட்டிகள் நடக்கின்றன.அன்னுார் தாசபளஞ்சிக மண்டபத்தில், காலை 10:00 மணிக்கு, கட்டுரை, பேச்சு, இசைப்போட்டி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனியாக நடக்கின்றன. இசைப் போட்டியில் பாரதியார் பாடல்கள் மட்டும் பாட வேண்டும். முதல் மூன்று இடங்கள் பிடிப்போருக்கு, ரொக்கம், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. மதியம் 3:30 மணிக்கு பாரதி விழா நடக்கிறது.இதில் பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதினம் குமரகுருபர அடிகள் வாழ்த்தி பேசுகின்றனர். பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார், 'பாரதி எனும் செந்தமிழ் தேனே' எனும் தலைப்பில் பேசுகிறார். பாரதி மைய நிறுவனர் கோபி உட்பட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க 63692 02135 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்