உள்ளூர் செய்திகள்

சர்வதேச தரத்தில் செல்லப்பன் வித்யா மந்திர்

காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளி கல்வி, விளையாட்டு, கலை, பண்பாடு மற்றும் மாணவர் பாதுகாப்பு என அனைத்து வகையிலும் முதன்மை பெற்று செயல்பட்டு வருவதாக் தாளாளர் சத்தியன் கூறுகிறார்.அவர் மேலும் கூறியதாவது:மாணவர்களின் ஏட்டுக்கல்வியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் முழுமையான ஆளுமை வளர்ச்சியை லட்சியமாக கொண்டு இயங்கி வருகிறது.10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் சிறந்து விளங்குகிறது.அகில இந்திய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்க்கும் செரிவான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் உண்டு.ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நவீன டிஜிட்டல் கருவி மூலமாக செய்முறை விளக்கங்களுடன் மாணவர்களின் மனங்களில் பதியும் வண்ணம் கற்பிக்கப்படுகிறது.ஆயிரக்கணக்கான புத்தகங்கள், ஆய்வு நுால்கள் மின்னுால்களைக் கொண்டு மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தையும், அறிவு தேடலையும் துாண்டும் வகையில் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து 4 முறை தமிழ்நாடு முதல்வர் கோப்பை பெற்றுள்ளோம்.டேபிள் டென்னிஸ் விளையாட்டுத்துறையில் எங்கள் பள்ளி மாணவன் இவ்வாண்டு முதலிடம் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார்.சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் வளாகத்தில் அமைந்துள்ளது.மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலை பண்பாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் முதன்மை விருதுகளையும் கோப்பைகளையும் பெற்று வருகின்றனர்.தூய்மையான காற்று, இயற்கையோடு அமைதியான சூழல் நிறைந்த 55 ஏக்கர் பரப்பளவில் பள்ளி வளாகம் அமைந்துள்ளது.மாணவர்கள் சுறுசுறுப்புடன் பயில முற்றிலும் குளிரூட்டப்பட்ட நவீன வகுப்பறை பெற்றது எங்கள் பள்ளி.ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து ரசிக்கும் பிரம்மாண்ட ஆடிட்டோரியம் அமைந்துள்ளது.மாணவர் விடுதியில், சுவையான ஊட்டச்சத்து மிக்க தரமான உணவு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வர நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பேருந்து இயக்கப்படுகிறது.தலைமையின் அர்ப்பணிப்பு:பள்ளி நிர்வாக இயக்குனர் சங்கீதா, கல்வி இயக்குனர் மற்றும் முதல்வர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் இப்பள்ளி சர்வதேச தரத்திலான எதிர்காலத் தலைமுறையை வெற்றிகரமாக செதுக்கி வருகிறது.தற்போது வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்