முதுநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூர்: சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி எம்.டி. படிப்புக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார்:அரசு ஒதுக்கீடு இடங்களின் கீழ் அரசு கல்லுாரிகளில் சித்தா, யுனானி மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கும் (எம்.டி.), சுயநிதி ஓமியோபதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள ஓமியோபதி (எம்.டி.) மருத்துவ முதுநிலை படிப்புக்கு 2026 - 2027ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை பெற இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் www.tnayushselection.org என்ற இணைய வழியில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்லைன் வாயிலாக மட்டுமே கட்டணம் செலுத்தி, விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஒதுக்கீட்டு பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து 'செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குனர் அலுவலகம், அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை 600106' என்ற முகவரிக்கு வரும், 3ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.