பணிபுரிய பத்து சிறந்த ஐ.டி., நிறுவனங்கள்
2011ம் ஆண்டில் பணிபுரிய உலக அளவில் நூறு சிறந்த ஐ.டி., நிறுவனங்களின் பட்டியலை பிரபல ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பணியாளர்களின் ஊதியம், பணிச் சூழ்நிலை, நிறுவனம் ஊழியர்களுக்கு அளிக்கும் பணிச் சுதந்திரம், நிறுவனத்தின் உலகளாவிய மதிப்பு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் சிறந்த பத்து ஐ.டி., நிறுவனங்களைக் காண்போம். சிறந்த பத்து நிறுவனங்கள்* எஸ்.ஏ.எஸ்., (SAS)* கூகுள் (Google)* நெட் அப் (NetApp)* சிஸ்கோ சிஸ்டம்ஸ் (Cisco Systems)* கியூயல் காம் (Qualcomm)* ஷேர்டு டெக்னாலஜிஸ் (Shared Technologies)* இன்டெல் (Intel)* சேல்ஸ்போர்ஸ் டாட் காம் (Salesforce.com)* அடோப் சிஸ்டம்ஸ் (Adobe Systems)* மைக்ரோ சாப்ட் (Microsoft)