உள்ளூர் செய்திகள்

ஆங்கிலம் முதல் தாள் எளிமையாக இருந்தது

பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வில், படிப்பில் பின்தங்கிய சராசரி மாணவர்களும் அதிக மதிப்பெண் பெறும் அளவில் கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர். "புத்தகத்திலுள்ள, அதேசமயம் எதிர்பார்க்கப்பட்ட கேள்விகளே கேட்கப்பட்டிருந்தன. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளே வந்திருந்தன. ப்ளூ பிரிண்டில் உள்ளபடி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. முதல் 3 பாடங்களில் இருந்து கட்டுரை, பாராகிராப் மற்றும் போயம் ஆகியவை கேட்கப்பட்டிருந்தன. மேலும் கிராமர் பகுதி எளிமையாக இருந்தது. இதைத்தவிர உரையாடல் பகுதி மற்றும் பீல்டு பகுதி போன்றவையும் எளிமையாக இருந்தன" என்று ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர்.      


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்