உள்ளூர் செய்திகள்

எல்லைப் பாதுகாப்புப் படை பணி வாய்ப்புகள்

சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான எல்லையை முதலில் மாநில காவல் துறைகளே கண்காணித்து வந்தன. ஆனால் 1965ல் பாகிஸ்தான் கட்ச் பகுதியில் தாக்குதலை நடத்திய போது எல்லையை காப்பதற்கென்று பிரத்யேக படை தேவை என்பது உணரப்பட்டது. இதன் விளைவாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.,) எல்லைப் பாதுகாப்புப் படை 01.12.1965 அன்று கொண்டு வரப்பட்டது. இந்தப் படையில் ஆண்களுக்கான கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மென்) பிரிவில் 2922 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த இடங்களுக்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு உள்ளது. வயது வரம்புபி.எஸ்.எப்.,பின் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க 01.08.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதிபிளஸ் 2விற்கு நிகரான படிப்பைஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். இத்துடன் தொடர்புடைய டிரேட்ஸ்மென் பிரிவில் இரண்டாண்டு கால பணியனுபவமோ அல்லது ஐ.டி.ஐ., வொகேஷனல் இன்ஸ்டியூட் மூலமாக ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பையோ அல்லது ஐ.டி.ஐ., மூலமாக 2 ஆண்டு கால டிப்ளமோ படிப்பையோ முடித்திருக்க வேண்டும். உடல் தகுதிபார்டர் செக்யூரிட்டி போர்சின் டிரேட்ஸ்மென் பிரிவு கான்ஸ்டபிள் பதவிக்கு சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படுகின்றன. உயரம் குறைந்த பட்சம் 162.5 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு குறைந்த பட்சம் 76.81 செ.மீ., இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.  தேர்ச்சி முறை பி.எஸ்.எப்.,பின் கான்ஸ்டபிள் பதவிக்கு எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவப் பரிசோதனை என்ற பல நிலைகளிலான தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது. விண்ணப்பிப்பது எப்படிஎல்லைப் பாதுகாப்புப் படையின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/ஐ போஸ்டல் ஆர்டர் மூலமாக விண்ணப்பிக்கும் பகுதியின் கமாண்டண்ட்/ஐ.ஜி.,/டி.ஐ.ஜி பெயரில் அதே பகுதியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பிப்பது குறித்த முழு விபரங்களுக்கு www.bsf.nic.in என்னும் இணைய தளத்தைப் பார்க்கவும். விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.05.2011


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்