ஒரிசா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷனில் காலியிடங்கள்
ஒரிசா மாநிலத்தின் மின்சக்தி தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு நிறுவப்பட்ட ஒரிசா பவர் டிரான்ஸ் மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓ.பி.டி.சி.எல்.,) நிறுவனம் பிரசித்தி பெற்றதாகும். இந்த நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவிக்கு எலக்ட்ரிகல் பிரிவில் 23 காலியிடங்களும், ஜூனியர் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவியின் எலக்ட்ரிகல் பிரிவில் 80 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. வயது வரம்புஓ.பி.டி.சி.எல்., நிறுவனத்தின் எலக்ட்ரிகல் பிரிவு மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01.04.2011 அன்று 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதிஒரிசா பவர் நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் டிரெய்னிஎலக்ட்ரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பட்டப் படிப்பைக் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஜூனியர் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இதர விபரங்கள் ஒரிசா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இரண்டு பதவிகளுக்குமே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். தேர்ச்சி பெறுபவர்களில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவிக்கு மாதம் ரூ.12 ஆயிரமும், ஜூனியர் மேனேஜ்மெண்ட் பதவிக்கு மாதம் ரூ.8 ஆயிரமும் ஸ்டைபண்டாக வழங்கப்படும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிப்பது குறித்த முழு விபரங்களை இணைய தளத்திலிருந்து அறியவும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 07.05.2011இணைய தள முகவரி : www.optcl.co.in