உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி

புதுச்சேரியைச் சேர்ந்த அரசு அல்லாத அமைப்பு, புறநகர்ப் பகுதி மாணவர்களுக்கு 30 நாள் இலவச கணினி பயிற்சியை அளிக்கிறது. கட்டபொம்மன் இளைஞர் நலன் அமைப்பின் தலைவர் எம். பக்தவச்சலம் இது குறித்து பேசுகையில், இலவச கணினி பயிற்சியின் முதல் பிரிவு நேற்றுத் துவக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கணினியில் அடிப்படை விஷயங்கள் கற்றுத் தரப்படும். இந்த அமைப்பின் கீழ், புறநகர்ப் பகுதி இளைஞர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகளும், உதவிகளும் அளிக்கப்படுகிறது. அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் எங்கள் செயல்பாடு அமையும் என்று அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்