விவசாய பல்கலை சேர்க்கை விவரம் அறிவிப்பு
கோவை: கோவையிலுள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கையை அறிவித்துள்ளது. மொத்தம் 13 இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே மாதம் 6 ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. மேலும் இந்தாண்டு நாகை மாவட்டம் கீழ்வேளூர் என்ற இடத்தில் ஒரு புதிய விவசாய கல்லூரியும், பட்டு வளர்ப்பில் 4 வருட பி.எஸ்சி படிப்பும் இந்தாண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்தாண்டு இளநிலை படிப்புகளில் மொத்தம் 1224 இடங்கள் இருந்தன. ஆனால், இந்தாண்டு அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு 1365 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இந்த பல்கலையின் கீழுள்ள 11 இணைப்பு கல்லூரிகளும்(கோவை, மதுரை, திருச்சி, கிள்ளிகுளம், பெரியகுளம், குமுளூர், நாகப்பட்டினம் மற்றும் மேட்டுப்பாளையம்) மாணவர்களை சேர்க்க ஒற்றை சாளர முறையைப் பின்பற்றும். 6 அடிப்படை படிப்புகளும், 7 தொழில்நுட்ப படிப்புகளும் உள்ளன. அடிப்படை படிப்புகளை எடுத்துக்கொண்டால், ஒரு செமஸ்டருக்கு ரூ.7310 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது மற்றும் செல்ப்-சப்போர்டிங் படிப்புகளுக்கு ரூ.33000 வரை வசூலிக்கப்படுகிறது. இதர சேர்க்கை விவரங்கள், விண்ணப்ப விவரங்கள், ஒதுக்கீடுகள் மற்றும் பிற விவரங்களை விரிவாக அறிந்துகொள்ள www.tnau.ac.in என்ற வலைத்தளம் செல்லவும். 06.05.11 - விண்ணப்பம் வழங்கல் 31.05.11 - விண்ணப்பிக்கும் கடைசி தேதி 10.06.11 - தரப்பட்டியல் வெளியீடு 15.06.11 முதல் 19.06.11 - முதல்நிலை கவுன்சிலிங்(1 நாளைக்கு 300 பேர்) 25.06.11 - சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங்(முன்னாள் ராணுவ வீரர்/ஊனமுற்றவர்/விளையாட்டு ஒதுக்கீடு/தொழிற்கல்வி ஒதுக்கீடு 02.07.11 - பொது வகை - இரண்டாம்நிலை கவுன்சிலிங் 06.07.11 - மூன்றாம்நிலை கவுன்சிலிங் 14.07.11 - நான்காம்நிலை கவுன்சிலிங் 18.07.11 - படிப்பிற்கான பதிவு மற்றும் வகுப்புகள் தொடக்கம்