ஜி.வி., பள்ளி வளர்ச்சி திட்டத்தில் ரூ.1 கோடி நலத்திட்டம்
வேலூர்: வேலூர், வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில், ஜி.வி., பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,539 பெஞ்ச், சேர்கள் வழங்கும் விழா, வேலூர் வி.ஐ.டி., வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. வி.ஐ.டி., பல்கலைக்கழக திட்ட அலுவலர் தமிழ்மாறன் வரவேற்றார். வி.ஐ.டி., துணைத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் மனோகரா சிங் சிறப்பாளராக கலந்து கொண்டார். வி.ஐ.டி., பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன், வேலூர்,திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி,கல்லூரிகளுக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பெஞ்ச், சேர்களை வழங்கி பேசினார். நிக்கோலஸ் நன்றி கூறினார்.