உள்ளூர் செய்திகள்

நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கோரி 183 கல்லூரிகள் விண்ணப்பம்

சென்னை: நாட்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கோரி 183 கல்லூரிகள் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளன. இவற்றில் பெரும்பான கல்லூரிகள் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் தற்போது 117 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டிலும் மகாராஷ்டிரத்திலும் தலா 20 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. தற்போது தமிழகத்தில் 31 கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக்கக் கோரி பல்கலைக்கழக மானியக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளன. மகாராஷ்டிரத்திலிருந்து 19 விண்ணப்பங்களும் உத்தரபிரதேசத்திலிருந்து 23 விண்ணப்பங்களும் கர்நாடகத்திலிருந்தும் ஆந்திரத்திலிருந்தும் தலா 18 விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது சுயநிதி அடிப்படையில் செயல்பட்டு வரும் பல்வேறு கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பெறவதற்கு அக்கறை காட்டி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும்போது, அந்தக் கல்வி நிலையத்தில் அட்மிஷனை நேரடியாக செய்து கொள்ள முடியும் என்பதுதான்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்