உள்ளூர் செய்திகள்

இரண்டு ஆண்டுகளில் ‘சந்திரயான்- 2’: ‘இஸ்ரோ’ விஞ்ஞானி

திருப்பூர்: “இன்னும் இரண்டு ஆண்டுகளில் சந்திரனுக்கு, ‘சந்திரயான்- 2’ அனுப்பப்பட உள்ளது,” என  ‘இஸ்ரோ’ விஞ்ஞானி கிருஷ்ணசாமி தெரிவித்தார். திருப்பூர் வடக்கு ரோட்டரி கிளப் சார்பில், ‘ஸ்பெக்ட்ரம் 2008’ விருது வழங்கும் விழா, டவுன்ஹாலில் நடந்தது. ‘இஸ்ரோ’ விஞ்ஞானி ஐ.ஆர்.எஸ்., மற்றும் எஸ்.எஸ்.எஸ்., சாட்டிலைட் பெங்களூரு மைய திட்ட இயக்குனர் கிருஷ்ணசாமிக்கு, விஞ்ஞானத்தில் செய்து வரும் சாதனைகளை பாராட்டி கவுரவிக்கும் விதமாக, ‘ஷேக் ஆப் ஹானர்’ விருது வழங்கப்பட்டது. விழாவில், ‘இஸ்ரோ’ விஞ்ஞானி கிருஷ்ணசாமி பேசியதாவது:திருப்பூரில் இன்று வழங்கப்பட்ட விருதை பெற்றதற்காக பெருமைப்படுகிறேன். ‘சந்திரயான்- 2’க்கான ஆய்வுகளும், அது தொடர்பான பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இன்னும் இரு ஆண்டுகளில் அப்பணி முடிந்து விடும். இரு ஆண்டுகளுக்கு பின், சந்திரயான்-2 அனுப்பப்படும். சந்திரனில் ஹீலியம் எரிபொருள் மிக அதிகமாக உள்ளது. பூமியில் இருப்பதை விட, அது பல மடங்கு அதிகமாக காணப்படுகிறது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் தேவை மிக அதிகமாக உள்ள நம் நாட்டுக்கு, ஹீலியம் கிடைத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு நமக்கு எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது. இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்