உள்ளூர் செய்திகள்

மாவட்ட வாரியாக அனுப்பப்படும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள், தேர்வுத்துறையில் இருந்து, மாவட்ட வாரியாக நாளை அனுப்பப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 9ம் தேதி காலை வெளியிடப்படுகிறது. அதேநேரத்தில், அந்தந்த பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவர்களின் முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் குறித்த பட்டியல், அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படுகின்றன. இதற்காக மாவட்ட வாரியாக, ஒவ்வொரு பள்ளி வாரியாக தேர்வு முடிவுகள் குறித்த பட்டியல்கள் தனியாக அச்சிடப்பட்டுள்ளன. இந்த பட்டியல்கள், 08-05-11 அன்று காலையில் இருந்து, மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மாவட்டங்களுக்கு சென்று சேர்ந்ததும், அவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதன்பின் 9ம் தேதி காலை, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை ஒரு இடத்திற்கு அழைத்து அவர்களிடம் தேர்வு முடிவுகள் குறித்த பட்டியல்களை முதன்மைக் கல்வி அதிகாரிகள் அளிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்