சிறப்பு கல்விக்கடன் முகாம் வரும் 23ல் நடைபெறுகிறது
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கியான கனரா மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில், கல்விக்கடன் சிறப்பு முகாம், வரும் 23 ம் தேதி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், www.vidhyalakshmi.co.in என்கிற இணையதளத்தில், உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யவேண்டும். முகாமில், கல்விக்கடன் விண்ணப்ப நகல் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய போட்டோ, வங்கி கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமான சான்று, சாதி சான்று நகல், பான் கார்டு, ஆதார் கார்ட, கல்வி கட்டண விவரம், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்று, முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று, கவுன்சிலிங் மூலம் பெறப்பட்ட மாணவர் சேர்க்கை ஆணை ஆகியவற்றையும் கொண்டு செல்ல வேண்டும்.தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள், மாணவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, கடன் அனுமதி அளிக்கின்றன. மேலும் விவரங்களுக்கு, 0421 2971185 என்கிற எண்ணில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.