மதுரை காமராஜ் பல்கலை., தேர்தல்: 25 வேட்பு மனுக்கள் ஏற்பு
மனுக்கள் பரிசீலனை, பதிவாளர் (பொறுப்பு) ஹரிஹரன் முன்னிலையில் நேற்று நடந்தது. செனட் உறுப்பினருக்கு தாக்கல் செய்த மனுவை, பொருளியல் துறை பேராசிரியர் சாமிகண்ணன் வாபஸ் பெற்றார். மூன்று சிண்டிகேட் உறுப்பினர் (பல்கலை பேராசிரியர், கல்லூரி முதல்வர், கல்லூரி ஆசிரியர்) பதவிகளுக்கு, சமூக அறிவியல் துறை பேராசிரியர் கண்ணன், பொருளியல் துறை பேராசிரியர் சாமிகண்ணன் உட்பட 6 பேர் மனுக்களும், செனட் உறுப்பினர் பதவிகளுக்கு 10 மற்றும் கல்வி பேரவை நிலைக்குழு பதவிகளுக்கு 9 மனுக்களும் ஏற்கப்பட்டன. தேர்தல் ஆக.,12, காலை 11 மணி முதல் 4 வரை பல்கலையில் நடக்கிறது. பல்கலை பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், கல்லூரி ஆசிரியர்கள் என, 137 பேர் இத்தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர்.