உள்ளூர் செய்திகள்

ராமகிருஷ்ணா மகளிர் கல்லுாரி 30வது பட்டமளிப்பு விழா

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், 30வது பட்டமளிப்பு விழா நடந்தது.சென்னை மஹிந்திரா நிறுவன துணைத்தலைவர் ஷங்கர் வேணுகோபால் பேசுகையில், தொடர்ந்து கற்க வேண்டியது அவசியம். வாழ்க்கை சிறக்க, மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். வலிமை, ஆர்வம், மற்றும் உயர்நோக்கோடு நடைமுறைக்கு ஏற்றபடி, செயல்பட வேண்டும். தற்காலச் சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக் கொண்டு சாதனைப் பெண்களாகத் திகழ வேண்டும், என்றார்.எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பல்கலை அளவில், ரேங்க் பெற்ற ஒன்பது மாணவியருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில், 578 மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்