முதுநிலை மருத்துவ படிப்பு புதுச்சேரிக்கு 308 சீட்
புதுச்சேரி: முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீடாக இந்தாண்டு 308 சீட்டுகள் பெறப்பட்டுள்ளன.புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவ கல்லுாரி, மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் உள்ள எம்.டி., எம்.எஸ்., மருத்துவ படிப்புக்கான இடங்கள் சென்டாக் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் திருத்தப்பட்ட இடங்கள் குறித்த விவரம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரியில் முதுநிலை மருத்துவ படிப்பில் மொத்தாக 616 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீடாக 308 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடாக 278 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீடாக 30 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. கிளினிக்கல் சார்ந்த மருத்துவ படிப்பில் உள்ள 264 இடங்களில் அரசு ஒதுக்கீடாக 132 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடாக 122 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீடாக 10 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.அதன் விபரம்:இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்ள 21 இடங்களில் அரசு ஒதுக்கீடாக 11 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீடாக 10 இடங்களும், பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் உள்ள 40 இடங்களில் அரசு ஒதுக்கீடாக 20 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடாக 20 இடங்களும். மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் உள்ள 95 இடங்களில் அரசு ஒதுக்கீடாக 47 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடாக 48 இடங்களும், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் உள்ள 108 இடங்களில் அரசு ஒதுக்கீடாக 54 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடாக 54 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கிளினிக்கல் சாரா மருத்துவ படிப்பில் உள்ள 352 இடங்களில் அரசு ஒதுக்கீடாக 176 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடாக 156 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் உள்ள 41 இடங்களில் அரசு ஒதுக்கீடாக 21 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீடாக 20 இடங்களும், பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் உள்ள 61 இடங்களில் அரசு ஒதுக்கீடாக 30 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடாக 31 இடங்களும். மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் உள்ள 120 இடங்களில் அரசு ஒதுக்கீடாக 60 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடாக 60 இடங்களும், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் உள்ள 130 இடங்களில் அரசு ஒதுக்கீடாக 65 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடாக 65 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.