உள்ளூர் செய்திகள்

ஐஐடி ஜேஇஇ ஒரே நாளில் 3800 பேர் பதிவு

ஐஐடி ஜேஇஇ என்று அறியப்படும் நுழைவுத் தேர்வு 2012ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க அக்டோபர் 31ம் தேதி முதல் ஆன்லைனில் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆன்லைன் வசதி துவங்கிய முதல் நாளன்றே 3800 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் உள்ள 15 ஐஐடிக்களில் உள்ள பல்வேறு படிப்புகளில் மொத்தமாக 7,000 சேர்க்கை இடங்களில் மாணவர்கள் சேர்க்க இந்த தேர்வு நடைபெறுகிறது. தேர்வெழுத விரும்புவோர் ஆன்லைனிலும், விண்ணப்பத்தை நேரடியாக பெற்று பூர்த்தி செய்தும் அளிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் டிசம்பர் 15ம் தேதியாகும். ஆன்லைனில் டிசம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்