உள்ளூர் செய்திகள்

மேலாண் குழு கூட்டம் ஆக., 4ல் நடத்த உத்தரவு

சேலம்: அரசு பள்ளிகளில் மேலாண் குழு கூட்டத்தை, ஆக., 4ல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, திட்டப்பணிகள் குறித்து கண்காணிக்கவும், பள்ளிகளை மேலாண்மை செய்யவும், மேலாண் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர், பெற்றோர், உள்ளாட்சி பிரதிநிதி உள்ளிட்டோர் அடங்கிய இக்குழுவினர், அவ்வப்போது கூடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் வரும் ஆக., 4ல் அனைத்து பள்ளிகளிலும் மேலாண் குழு கூட்டம் நடத்த, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து, பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவர்கள், உயர்கல்வியை தொடர்கின்றனரா என்பதை கண்காணிக்கவும், அதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்