சட்டப்படிப்பு: மூன்றாம் கட்ட கலந்தாய்வில் 56 இடங்கள் நிரம்பின
சென்னை: ஐந்தாண்டு பி.ஏ., - பி.எல்., சட்ட படிப்பிற்கான, மூன்றாம் கட்ட கலந்தாய்வில், 56 இடங்கள் நிரம்பின. தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், அரசு சட்டக் கல்லூரியில், பி.ஏ., - பி.எல்., ஐந்தாண்டு சட்டப் படிப்பில், 1,052 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி துவங்கியது. முதல், இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவில், 977 இடங்கள் நிரம்பின. மேலும், சிறப்பு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத உள்ள இடங்கள், இடம் கிடைத்தும் சேராத மாணவர் என, 75 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, நேற்று நடந்தது. இதில், 56 இடங்கள் நிரப்பப்பட்டன. இதுகுறித்து, பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் கூறுகையில், "மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கு பின்பும் நிரப்பப்படாமல் உள்ள, 19 இடங்கள், மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும்" என்றார்.