உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் அரசு வேலை கேட்டு 67 லட்சம் பேர் காத்திருப்பு

அரசு வேலை வாய்ப்புக்காக, 67 லட்சத்து 54 ஆயிரம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு, டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித் தகுதியை பதிவு செய்து காத்திருப்பவர்களின் பட்டியலை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 15 லட்சத்து 40 ஆயிரத்து 897 பேர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் பிரிவில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 699 பேர், பழங்குடியினர் பிரிவில் 24 ஆயிரத்து 403 பேர், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 14 லட்சத்து 39 ஆயிரத்து 813 பேர், அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். மேலும், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 749 பேரும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 28 லட்சத்து 93 ஆயிரத்து 186 பேரும், இதர பிரிவினரில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 60 பேரும், அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஒட்டுமொத்தத்தில், 67 லட்சத்து 54 ஆயிரத்து 807 பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 46.77 சதவீதம் பேர் ஆண்கள்; 53.22 சதவீதம் பேர் பெண்கள். ஆண்கள், 31 லட்சத்து 59 ஆயிரத்து 231 பேரும், பெண்கள், 35 லட்சத்து 95 ஆயிரத்து 576 பேரும், அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்