உள்ளூர் செய்திகள்

விரைவில் தொழிற்கல்வி பாடத்திட்டம்: சிபல்

டெல்லி: முன்னேற்றத்திற்காக, திறன்மிகுந்த மற்றும் வளம் நிறைந்த பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் தேவையை வலியுறுத்தும் விதமாக, ஒரு தொழிற்கல்வி பாடத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். தேசிய தொழிற்கல்வி தகுதி செயல்திட்டம் என்பது 8 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கானது. மேலும் இந்த திட்டமானது சி.பி.எஸ்.இ. ஒத்துழைப்புடன் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, "கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சிறப்பு வாய்ந்த பாடத்திட்டங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் பணியமர்த்தக்கூடிய பட்டதாரிகளை உருவாக்குவதில்லை. கல்வியில் வெளிநாட்டு முதலீடானது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. மேலும், கல்வித் துறையில், அரசானது, தனியாருடன் இணைந்து செயல்பட வேண்டிய தேவையும் உள்ளது. இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற, மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்