உள்ளூர் செய்திகள்

மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 590 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 58 ஆயிரத்து 887 பேர் பெயில் ஆகியுள்ளனர். மாணவிகள் 42 ஆயிரத்து 63 பேர் பெயில் ஆகியுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி வகிதத்தை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், கடந்த ஆண்டை(85.2%) விட ( 85.9%) அதிகரித்துள்ளன தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 2 முதல், 25ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. பள்ளிகள் சார்பில், ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வு வகையில், 57 ஆயிரத்து, 86 மாணவர்களும் தேர்வெழுதினர். ஆயிரத்து, 890 மையங்களில் தேர்வுகள் நடந்தன. மாணவர்கள் ஆவலுடன் எதிர்பர்த்த இந்த முடிவுகளை இன்று காலை 9.00 மணிக்கு கல்வி துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டார். இதே நேரத்தில், அந்தந்த பள்ளிகளில், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளும் ஒட்டப்பட்டன. ரிசல்ட் வெளியிடுவதில் தினமலர் சேவை: தினமலர் இணையதளத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் தேர்வு மற்றும் மார்க்குகளை பார்த்து அறிந்து கொண்டனர். பதிவு செய்தவர்களுக்கு இலவசமாக ரிசல்ட் நிலவரம் மொபைல் போன் மூலம் உடனுக்குடன் போய்ச்சேர்ந்தது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்