உள்ளூர் செய்திகள்

பயோ டெக்னாலஜியை ஒதுக்கும் மாணவர்கள்

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (696), எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (581), எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (414) படிப்புகளுக்கு மாணவர்கள் இடையே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அடைப்புக்குறியில் உள்ளது. எப்போதுமே, ஒரு சில பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் அதிக முக்கியத்தும் அளிப்பதும், ஒரு சில பாடப்பிரிவுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும் நடைமுறையில் இருப்பதுதான். அதுதான் இந்த ஆண்டும் நடந்துவருகிறது. அதிக முக்கியத்தும் பெறும், ஆனால் சாதாரண பணிகளாக இல்லாமல், ஆராய்ச்சி, ஆய்வு என மருத்துவத் துறைக்கு ஒப்பாக செயல்படும் பயோ டெக்னாலஜி துறைக்கு மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லாதது சற்று கவலையை அளிக்கிறது. ஒரு சில ஆண்டு சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவிற்கு மாணவர்கள் அதிகமாக போட்டி போட்டு வந்தனர். சில ஆண்டுகளாக கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைக்கு போட்டி இருந்துள்ளது. ஆனால் தற்போது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதற்கு நேர்மாறாக, பயோ டெக்னாலஜி (6), ஆட்டோமெபைல் இன்ஜினியரிங் (25), எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் (51), ஏரோநாடிக்கல் இன்ஜினியரிங் (54) பாடப்பிரிவுகளை மாணவர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். ஐ.டி. எனப்படும் இன்பர்மேஷன் டெக்னாலஜியை 148 மாணவர்களும், சிவில் இன்ஜினியரிங்கை (366) மாணவர்களும், தேர்வு செய்துள்ளனர். கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் 2670 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்