உள்ளூர் செய்திகள்

தனித்தேர்வர்கள் எங்கெங்கு ஹால்டிக்கெட் பெறலாம்

இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறையின் சென்னை மண்டல துணை இயக்குனர் ரேவதி ருக்மாங்கதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது,  ஓ.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 21-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 23-ந்தேதியும் தொடங்குகின்றன. தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு 17-ந்தேதி மற்றும்  19-ந் தேதி ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. ஹால்டிக்கெட்டுகள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது. ஹால்டிக்கெட்டை பெற்றுக்கொள்ளும் தேர்வர்கள் அதில் தங்கள் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம், பதிவு எண், தேர்வு எழுதும் பாடங்கள், தேர்வு நாள் ஆகிய விவரங்கள் சரியாக அச்சிடப்பட்டு உள்ளனவா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் தவறு இருந்தால் தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனரை நேரில் அல்லது தபால் மூலம் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஹால்டிக்கெட் விநியோகிக்கப்படும் மையங்கள் கல்வி மாவட்டம் வாரியாக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு (வண்டலூர் முதல் அச்சரப்பாக்கம் வரை) - அறிஞர் அண்ணா நகராட்சி உயர்நிலைப்பள்ளி, செங்கல்பட்டுசெங்கல்பட்டு (ஆலந்தூர் முதல் பெருங்களத்தூர் வரை) - ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப்பள்ளி, தாம்பரம்காஞ்சீபுரம் - சி.எம்.சுப்புராய முதலியார் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்பொன்னேரி - டி.வி.எஸ். ரெட்டி மேல்நிலைப்பள்ளி, மீஞ்சூர்திருவள்ளூர் - ஞானவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்தென் சென்னை - மதரசா-ஐ-ஆசாம் மேல்நிலைப்பள்ளி, அண்ணாசாலை (ஸ்பென்சர் சிக்னல் அருகில்)மத்திய சென்னை - சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர்கிழக்கு சென்னை - இந்து மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணிவடசென்னை - பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி. தேர்வு முடிவு வெளியானவுடன் மதிப்பெண் சான்றிதழை பெறுவதற்கு வசதியாக வீட்டு முகவரி எழுதிய ரூ.30 அஞ்சல்தலை ஒட்டிய பெரிய தபால் உறையை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ரேவதி ருக்மாங்கதன் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்