உள்ளூர் செய்திகள்

யு.ஜி.சி. நடத்தும் நெட் தேர்வு

சென்னை: மத்திய பல்கலைக்கழக மானியக்குழு() நடத்தும் கல்லூரி ஆசியரியர் பணிக்கான தேசிய தகுதித்தேர்வு(National Eligibility Test - NET), வருடத்திற்கு 2 முறை, ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்துப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. இந்த நெட் தேர்வில் ஜேஆர்எப் மற்றும் லெக்சர்ஷிப் என்ற 2 நிலைகள் உள்ளன. பிஎச்டி ஆய்வை மேற்கொள்ள உதவித் தொகை வழங்கும் திட்டமே ஜேஆர்எப் ஆகும். லெக்சர்ஷிப் நிலையில் அந்த சலுகை கிடையாது. இத்தேர்வானது, 78 கலை மற்றும் மானிடவியல் பாடங்களில்(மொழிப் பாடங்கள் உட்பட), நாடு முழுவதும் 74 பல்கலைக்கழக மையங்களில் வரும் டிசம்பர் 24ம் தேதி இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. பாடங்கள் பொருளாதாரம், அரசியல் அறிவியல், தத்துவம், உளவியல், சமூகவியல், வரலாறு, மானிடவியல்(Anthropology), வணிகவியல், கல்வி, சமூகப் பணி, பாதுகாப்பு மற்றும் வியூகப் படிப்புகள், மனையியல்(Home Science), பொது நிர்வாகம், மக்கள் தொகை படிப்புகள், இசை, மேலாண்மை, உடற்கல்வி, பணியாளர் நலன் மற்றும் மனிதவளத்துறை மேலாண்மை, சட்டம், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், இதழியல் மற்றும் பொதுமக்கள் தொடர்பு, நடனம், நாடகம் மற்றும் தியேட்டர், மியூசியாலஜி, கன்சர்வேஷன் ஆர்கியாலஜி, கிரிமினாலஜி, பெண்ணியல், விஷ¤வல் ஆர்ட்ஸ், சோசியல் மெடிசின் மற்றும் கம்யூனிட்டி ஹெல்த், பாரென்சிக் சயின்ஸ், சுற்றுசூழல் அறிவியல், கணிப்பொறி அறிவியல் மற்றும் பயன்பாடுகள், எலக்ட்ரானிக் சயின்ஸ், மனித உரிமைகள் மற்றும் கடமைகள், சுற்றுலா நிர்வாகம் மற்றும் மேலாண்மை, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்றவை NET தேர்வின் பாடங்களில் சில. தகுதி முதுநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். பார்வையற்றவர்கள், SC/ST பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் எடுத்திருந்தால் போதும். இறுதித் தேர்வு முடிவுகளுக்கு காத்திருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு லெக்சர்ஷிப் தேர்வுக்கு அதிகபட்ச வயதுவரம்பு என்று எதுவுமில்லை. JRF சலுகையைப் பெற அதிகபட்ச வயது வரம்பாக 28 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், OBC, SC/ST, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு 33 வயதுவரை விலக்களிக்கப்பட்டுள்ளது. கட்டணம் பொதுப் பிரிவினருக்கு தேர்வுக் கட்டணமாக ரூ.450ம், OBC பிரிவினருக்கு ரூ.225ம், SC/ST மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.110ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24ம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் இம்மாதம்(அக்டோபர்) 25ம் தேதி. இத்தேர்வைப் பற்றிய இதர விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் பற்றி அறிந்துகொள்ள www.ugc.ac.in என்ற இணையதளம் செல்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்