உள்ளூர் செய்திகள்

பாடப்புத்தகங்கள் கிடைக்காததால் மாணவர்கள் பாதிப்பு

மூணாறு: கேரளாவில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பாடப் புத்தகங்கள் வழங்காததால், மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் பள்ளிகள் ஆரம்பித்து, இரண்டு மாதங்கள் ஆகியும், தமிழ் மற்றும் மலையாள மொழி வழிக் கல்வி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து புத்தகங்களும் வழங்கப்படாமல் உள்ளன. இடுக்கி மாவட்டத்தில் தமிழ் வழி கல்வி பெறும் மாணவ, மாணவிகள் அதிகளவில் உள்ளனர். இவர்களுக்கு ஒரு சில புத்தகங்கள் இது வரை வழங்கப்படவில்லை. காலாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், புத்தகங்கள் இன்றி மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தேர்வை சந்திக்க வேண்டி உள்ளதால், புத்தகங்களை நகல் எடுத்து படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். புத்தகங்களின் பற்றாக்குறை குறித்து, ஆசிரியர்கள், உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. புத்தகங்கள் அச்சடிக்கும் அரசு நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடியால், காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். கல்வித் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், பொதுத் தேர்வை சந்திப்பதற்கு காத்திருக்கும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்