உள்ளூர் செய்திகள்

சாய்ராம் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

சென்னை: தமிழக அரசின் மேல்நிலைப்பள்ளிகளில், ஆங்கிலப் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு சாய்ராம் பொறியியல் கல்லூரியில் புத்தொளிப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்குபெற்ற 106 பேருக்கும், சென்னை பிரசிடென்சி கல்லூரி ஆங்கில பேராசிரியை ஆர்.வேதவள்ளி, நந்தனம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ஜெ.பன்னீர் செல்வம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியர் எம்.ஐ.டி.,யை சேர்ந்த கே.இளங்கோ ஆகியோர் புத்தொளிப் பயிற்சி வகுப்புகள் நடத்தினர். பயிற்சியில் கலந்து கொண்ட அரசு ஆங்கில பாட முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னை, மேற்கு தாம்பரம், சாய்ராம் பொறியியல்  கல்லூரியில் கணினி பாட வகுப்புகளும் கூடுதலாக எடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் 17 முதல் 22ம் தேதி வரை ஒரு வார காலம் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமை, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமியும், இணை இயக்குனர் அறிவொளியும் நேரில் பார்வையிட்டனர். இப்பயிற்சியின் போது தென்கச்சி கோ.சாமி நாதன், ஆசிரியர்களை ஊக்குவித்து வாழ்த்திப் பேசினார். இறுதியில் சாய்ராம் கல்லூரியின் சேர்மன், அரிமா. லியோ முத்து அனைத்து ஆசிரியர்களுக் கும் ஆங்கில டிக்சனரியும், அது தொடர்பான ‘சிடி’யையும் அன்பளிப்பாக வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்