உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அண்ணாமலையார் பல்கலை தொலைதூர கல்வி இயக்க பயிற்சி மைய தனி அதிகாரி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: அண்ணாமலையார் பல்கலை தொலைதூர கல்வி இயக்ககம், திண்டுக்கல் பட்டேல் கல்வி மற்றும் விளையாட்டு குழுமம் சார்பில் ஹாக்கி, குத்துச்சண்டை, சிலம்பம், கராத்தே, வாலிபால் ஆகிய பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சி திண்டுக்கல் என்.ஜி.ஓ.,காலனி விளையாட்டு திடலில் ஜூன் 27 முதல் ஜூலை 11 வரை நடக்கிறது. காலை 7 முதல் 9 மணி வரை, மாலை 4 முதல் 6 மணி வரை ஆகிய இரு வேளைகளில் பயிற்சி அளிக்கப்படும். பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ், சீருடைகள் வழங்கப்படும். பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது பெயர்களை ஞான குரு, செயலாளர் பட்டேல் கல்வி மற்றும் விளையாட்டு குழுமம், 26 ஏ,என்.ஜி.ஓ. காலனி, திண்டுக்கல் என்ற முகவரியில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 9994724840 ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்