உள்ளூர் செய்திகள்

உலகத்தமிழ் சங்கத்திற்கு புதிய இணையதளம்

சென்னை: மதுரை உலகத் தமிழ் சங்கத்திற்கு 4.95 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய இணையதளத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். உலகத் தமிழ் சங்கத்திற்கான பெருந்திட்ட வளாகம் கட்ட 25 கோடி ரூபாய், ஊதியம் மற்றும் திட்டப் பணிகளுக்கு மானியமாக இதுவரை 1.43 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 4.95 லட்சம் ரூபாய் செலவில் உலகத் தமிழ் சங்கத்திற்கென, www.ulagatamilsangam.org என்ற பெயரில் இணையதளம் துவக்கப்பட்டு உள்ளது. இதில் உலகத் தமிழ் சங்கத் துணை விதிகள்; சங்க திட்டங்கள்; ஜெயலலிதா அரசின் தமிழ் வளர்ச்சி குறித்த சாதனைகள்; இதுவரை நடந்த உலகத் தமிழ் மாநாடு குறித்த விவரம்; சங்கத் தமிழ் நிகழ்வுகள்; பழந்தமிழ் சங்கங்கள் குறித்த குறிப்புகள்; பல்வேறு நாடுகளில் உள்ள, உலகத் தமிழ் அமைப்புகள்; இந்தியாவில் உள்ள, வெளி மாநிலத் தமிழ் அமைப்புகள், தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தள இணைப்பு வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்