உள்ளூர் செய்திகள்

சிவகங்கை மாவட்ட கல்விச் செய்திகள்

சேவுகன் கல்லூரியில் தூய்மை இந்தியா தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில், தூய்மை இந்தியா திட்டம் என்.எஸ்.எஸ்.,மாணவர்களால் துவக்கப்பட்டது. என்.சி.சி.,மாணவர்களால், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடுவிழா முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ்., சார்பில் சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை இந்தியா மற்றும் பசுமை திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கூட்டம் தேவகோட்டை: புளியால் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் தலைமையாசிரியை வாசுகி தலைமையில் நடந்தது. வட்டார அளவில் நடந்த விளையாட்டு, ஓவியம், விழிப்புணர்வு நடன போட்டிகளில் வென்றவர்களை பாராட்டினர். பெற்றோர் ஆசிரியர்கள் இணைந்து 10ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற மாணவர்களை வழி நடத்துவது, ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு உயர்நிலைப்பள்ளி புளியாலில் அரசு மாணவர் விடுதி அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அறிவியல் கண்காட்சி காரைக்குடி: கல்லல் அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. உதவி தொடக்க கல்வி அலுவலர் அமல்ராஜ்கென்னடி துவக்கி வைத்தார். காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா தலைமை வகித்தார். சான்றிதழ் வழங்கல் காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை நுண்கலை மையத்தில் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, பதிவாளர் மாணிக்கவாசகம் தலைமையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்