சுற்றுச்சூழல் அறிவியல் குறித்து படித்தால்...
சுற்றுச்சூழலில் செல்வாக்கு செலுத்தும் மாற்றங்கள் மற்றும் சூழலில் வாழும் பொருட்களுக்கிடையிலான பரஸ்பர உறவுகள் தொடர்பான விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறது இந்தப் படிப்பு. ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு அம்சங்களைக் கொண்ட(multidisciplinary) இத்துறை தொடர்பான படிப்பு, பிசிகல் மற்றும் பயாலஜிகல் அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அதாவது, இயற்பியல், வேதியியல், உயிரியல், மண் அறிவியல், புவி அறிவியல் மற்றும் புவியியல் உள்ளிட்ட பிரிவுகள் அவற்றுள் அடக்கம். மனிதனின் மோசமான பல நடவடிக்கைகளால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுவரும் சூழலில், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், அத்துறை சம்பந்தமான நிபுணர்களின் தேவை கூடி வருகிறது. இந்த நிபுணர்கள், மனித நடவடிக்கைகளால், சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து, அதற்கேற்ற தீர்வுகளை முன்வைப்பார்கள். சுற்றுச்சூழல்(Environmental science) படிப்புகளை படித்த பட்டதாரிகள், Environmental Consultant என்ற நிலையில் வைக்கப்பட்டு, அவர்கள், மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் பணியமர்த்தப்பட்டு, சுற்றுச்சூழல் தொடர்பான ஆலோசனைகளை அளிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இதுதவிர, மேற்கண்ட நபர்கள், டெக்ஸ்டைல் மில், சுத்திகரிப்பு ஆலைகள், உரத் தொழிற்சாலைகள் மற்றும் அவை தொடர்பான பிற நிறுவனங்களில், சுற்றுச்சூழல் மாசுபாட்டின் நிலை குறித்து மேற்பார்வையிடும் பணியில் அமர்த்தப்படுவார்கள். அதேநேரம், இத்துறை சார்ந்த மாணவர்கள், அகடமிக் பிரிவிலேயே தொடர விரும்பினால், அவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம், சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை மேம்படுத்த வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல என்.ஜி.ஓ.,க்களிலும் பணி வாய்ப்புகள் உண்டு. இத்துறை தொடர்பான படிப்புகளை எங்கே மேற்கொள்ளலாம்? இந்தியளவில் சுற்றுச்சூழல் தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் உங்களின் பார்வைக்கு பட்டியலிடுகிறோம். புதுச்சேரி பல்கலை - புதுச்சேரிபாரதியார் பல்கலை - கோவைமைசூர் பல்கலை - மைசூர்ஐ.ஐ.எஸ்சி. - பெங்களூர்பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி - மும்பைஆந்திரா பல்கலை - விசாகப்பட்டணம்ஆச்சார்யா என்.ஜி. ரங்கா வேளாண் பல்கலை - ஐதராபாத்ஆச்சார்யா நாகர்ஜுனா பல்கலை - குண்டூர்பனாரஸ் இந்து பல்கலை - வாரணாசிபெங்களூர் பல்கலை - பெங்களூர்ஜாமியா மிலியா இஸ்லாமியா - டில்லிஜவஹர்லால் நேரு பல்கலை - டில்லிகண்ணூர் பல்கலை - கேரளாஒஸ்மானியா பல்கலை - ஐதராபாத்.