சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகள்
சென்னை: சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி, வட்டார போக்குவரத்து துறை சார்பில், மாணவ, மாணவியர் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. சாலை வார பாதுகாப்பு தினத்தையொட்டி, கடந்த 10 நாட்களாக, சென்னையில் பல்வேறு இடங்களில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, சென்னையில் உள்ள, 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. அதில், சாலை பாதுகாப்பு குறித்த வாசகம் எழுதும் போட்டி, சாலை பாதுகாப்பில் ஓட்டுனர், பொதுமக்கள் கடமைகள் என்ற தலைப்பில், கட்டுரை போட்டி மற்றும் பேச்சு போட்டி, ஓவிய போட்டிகள் நடைபெற்றன. சென்னையில் உள்ள 48 பள்ளிகளில் இருந்து 600 மாணவ, மாணவியர் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.