உள்ளூர் செய்திகள்

ராஜ்பவன் பள்ளியை மூட முடிவு

ராஜ்பவன் ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காக, 1976ல், ராஜ்பவனுக்குள் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்ப பள்ளி ஒன்று துவங்கப்பட்டது. தற்போது அப்பள்ளியில், 16 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இவர்களுக்காக, இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த பள்ளிக்கு வருவதற்கு, சட்டசபை உறுப்பினர்கள் விடுதி அருகே ராஜ்பவன் பின்புற வாசலில் வழி உள்ளது. தற்போது இங்கு படிக்கும் மாணவர்களில் ஒருவர் கூட, ராஜ்பவன் ஊழியர்களின் பிள்ளைகள் அல்ல. இதுகுறித்து கவர்னர் அலுவலகம் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், பொது உத்தரவு துறை துணை இயக்குனருக்கு மண்டல கல்வி அதிகாரி ரமேஷ் அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில், ராஜ்பவனுக்குள் இருக்கும் பள்ளியை மூடினால், அங்குள்ள மாணவர்களை, வசந்த நகரிலுள்ள அரசு கன்னடம் மற்றும் தமிழ் பள்ளிகளில் சேர்க்கலாம். ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யலாம் என, கூறியுள்ளார்.ஆனால், கவர்னர் மாளிகையின் கடிதம் குறித்த தகவல் வெளியானதால், சில மாணவர்களின் பெற்றோர், குழந்தை களை வேறு பள்ளிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்வியாண்டின் மத்தியில் இது போன்று, மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது சரியல்ல என்று, கல்வி அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளனர். இக்கடிதங்கள் பொது உத்தரவு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கவர்னர் உத்தரவுக்காக பொது உத்தரவு துறை காத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்