தொழிற்கல்வி ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம்
சேலம்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், சேலம் மண்டல பொதுக்குழு கூட்டம், கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிற்கல்வி பாடத்தை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர் பணி ஓய்வு பெற்றாலோ அல்லது பணி மாறுதலில் சென்றாலோ, அப்பணியிடம் அரசிடம் இருந்து திரும்ப பெறப்படுகிறது. இதனை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில அமைப்பாளர் ஜனார்த்தனன், ராஜாராம், மற்றும் ராமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.