உள்ளூர் செய்திகள்

தொழில் நுட்பங்களை விளக்கும் மாணவர்கள்

திண்டுக்கல்: தேனி மாவட்டம் குல்லப்புரம் தோட்ட கலைத்துறை சார்பில் செயல்படும் விவசாய தொழில் நுட்ப கல்லூரியின் 4ம் ஆண்டு மாணவர்கள் சின்னாளபட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் காந்திகிராமம், சின்னாளபட்டி, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், அம்பாத்துரை உட்பட பல இடங்களில் தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் விளக்கினர். அதிகளவு சாகுபடி, உற்பத்தி செலவை குறைப்பது, அதனால் ஏற்படும் பயன்கள், உலக நாடுகளின் நவீன தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கினர். பேராசிரியர் மணிமாறன் தலைமையிலான குழுவினர், விவசாயிகளிடம் பழகு முறை குறித்து விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்