பாரத் பள்ளி ஆண்டு விழா
புதுச்சேரி: அரியாங்குப்பம் பாரத் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், பள்ளி கண்காணிப்பாளர் கிருஷ்ணன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசளிப்பு விழா நடந்தது. தலைமையாசிரியர் உமாபார்த்தசாரதி வரவேற்றார். ஆடிட்டர் பூவராகவன், பள்ளி சட்ட ஆலோசகர் செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். கல்வித்துறை சார்பில் வட்ட மற்றும் மாநில அள வில் நடத்திய மாணவர் தின விழாவில், கதை சொல்லும் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 20 மாணவர்கள், தொண்டு நிறுவனம் நடத்திய பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற 50 மாணவர்களுக்கும், பரிசு வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் பார்த்தசாரதி முன்னிலை வகித் தார். கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை ஆனந்தி நன்றி கூறினார்.