உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் செயற்குழு கூட்டம்

திருப்பூர்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம், தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில், நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, துறை வேறுபாடு கருதாமல், முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும்; புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஓட்டுப்பதிவு நேர அதிகரிப்புக்கேற்ப, ஆசிரியர்களுக்கு மதிய நேரத்தில், ஒரு மணி நேரம் இடைவேளை வழங்க வேண்டும்; பெண் ஆசிரியர்களுக்கு, ஓட்டுச்சாவடி அமைவிடத்தில் இருந்து, இருப்பிடம் செல்ல, போக்குவரத்து வசதி செய்ய வேண்டும்&' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் சாயி செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாநில பொறுப்பாளர் விநாயகமூர்த்தி, செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். அவிநாசி, ஊத்துக்குளி, வெள்ளக்கோவில் ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்